எடப்பாடி பகுதியில் மிதமான மழை
எடப்பாடி சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
எடப்பாடி சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக எடப்பாடி நகர்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் பனிப் பொழிவு அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உழவர் சந்தை, காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.