விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?
முதல்வர் விஜய் பிறந்த நாளில் த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து எழுந்துள்ள கேள்விகள் பற்றி...
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகை த்ரிஷா பகிர்ந்தது செய்யறிவு படமென்று இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடினார். முதல்வரான பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாளை கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடி முதல் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரை பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஒரே ஒருவரின் வாழ்த்துப் பதிவுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருந்தது.
Advertisement
Advertisement
த்ரிஷாதான் அவர். கடந்த ஆண்டு, நடிகராக இருந்த விஜய்யின் பிறந்த நாளன்று, தனது செல்லப்பிராணியை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா, “பிறந்த நாள் வாழ்த்துகள் மிகச் சிறந்தவரே” என வாழ்த்தியிருந்தார்.
ஆனால், பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா, மறுநாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததுடன், விஜய் கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
“எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனத் தெரிவித்ததுடன், முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததை குறிக்கும் வகையில் 00.00 என்றும் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், த்ரிஷா பதிவிட்ட விஜய்யின் புகைப்படம் ஏஐ என்று ஒரு தரப்பினரும், பழைய புகைப்படம் என்று மற்றொரு தரப்பினரும் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்யறிவா? பழைய படமா?
த்ரிஷா பகிர்ந்த விஜய்யின் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு தரப்பினர் செய்யறிவு புகைப்படம் என்று கருத்து தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் பழைய புகைப்படம் என்றும், 2024-ல் இதே போன்ற சட்டையை விஜய் அணிந்திருந்ததாகவும் விவாதம் செய்து வருகின்றனர்.
ஆனால், பழைய புகைப்படம் என்பதை மறுக்கும் வகையில், த்ரிஷா வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் செல்போன் 2025-ல் வெளியானது என்றும் சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஹைதராபாத் கேக்?
இதனிடையே, த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கேக்களும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இத்தாலி வகை இனிப்பான ’டெடிராமிசு’ எனப்படும் 3 சிறிய வகை கேக்களும், மேங்கோ மற்றும் ஸ்ட்ராபரி வகை 2 பெரிய கேக்களும் டேபிளில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த ’டெடிராமிசு’ கேக்கள் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான குறிப்பிட்ட ஒரு கடையில் மட்டுமே என்றும், அதனை எப்படி ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு த்ரிஷா கொண்டு வந்தார் என்றும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஆனால், இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து எழும் கேள்விகளுக்கு த்ரிஷா தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Vijay's Birthday! Is the image shared by Trisha an AI-generated one?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.