நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!
நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? என்பது குறித்து ஜோதிடர் ஜெயஸ்ரீ கணித்து வெளியிட்ட தகவல் பற்றி...
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், நடிகர்களுக்கு இணையாக பல ஆண்டு காலமாக முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து அண்மையில் ஜோதிடர் ஒருவர் கணித்து வெளியிட்டிருந்தார்.
திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரின் காதல் திருமணம் குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சரியாக அவர் கணித்துச் சொன்ன விடியோ , அண்மையில் வெளியாகி, ஜோதிடர் சொன்னது போலவே, அந்த திருமணமும் நடந்து முடிந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வந்தது. அவர் ஜோதிடர் ஜெயஸ்ரீ.
Advertisement
Advertisement
ஏற்கெனவே முக்கியமான விஐபிக்கள் தொடர்பான ஜோதிடக் கணிப்புகளை வெளியிட்டுவரும் ஜோதிடர் ஜெயஸ்ரீ, கையிலிருக்கும் டேரட் கார்டுகளில் வரும் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய ஜோதிட அனுபவத்தின் வாயிலாக, எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கணித்துத் தெரிவிக்கிறார்.
தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜோதிடத் தகவல்களை வெளியிட்டு வருவதுடன், தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பிரபலங்கள் குறித்த கேள்விகளுக்கு ஆச்சரியமான பதில்களை அளித்துள்ளார்.
அந்த வகையில், அண்மையில் ஜோதிடர் ஜெயஸ்ரீ பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் ஆகுமா? என்று நேரடியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வியை முன்வைக்க, அவர் கையிலிருக்கும் கார்டுகளில் ஒன்றை எடுத்து, அதனைப் பார்த்து திருமணம் நடக்கும் வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
அதாவது குயின் ஆஃப் ஸ்வார்ட்ஸ் என்ற கார்டு வந்திருப்பதால் இந்த பதிலை அளித்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். வாள்களின் ராணி என்று இந்த கார்டு அடையாளப்படுத்தப்படுகிறது.
உற்றார், உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியிருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2014 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவருடன் நடிகை த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்கு முன்பே நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு, நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்கக் கூடாது என்று வருண் மற்றும் அவரது குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததாகவும், அதனால் த்ரிஷா திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது வரை நடிகை த்ரிஷா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது பற்றி அவரது ரசிகர்கள் பேசிவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே நிகழ்ச்சியில், ஜோதிடர் ஜெயஸ்ரீயிடம், நடிகர் சிம்புவுக்குத் திருமணம் நடக்குமா? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, ரொம்ப கஷ்டம், ஓடிக்கொண்டேதான் இருப்பார் என்றே பதிலளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
When will actress Trisha get married - An astrologer Jayashree makes a prediction