FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளியில் த்ரிஷா எடுத்த முடிவு!

நடிகை த்ரிஷாவின் பதிவு கவனம் பெற்றுள்ளது...

பகிர்:

நடிகை த்ரிஷா தீபாவளியை முன்னிட்டு புதிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்தாண்டு நடிகை த்ரிஷா நாயகியாக நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

தற்போது, புதிய திரைப்படமொன்றில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய்யுடன் கண்டுகளித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “இந்தத் தீபாவளிக்கு நான் சிறப்பான காரியத்தைச் செய்கிறேன். ஆதரவற்ற நாய்க்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுக்காக ரூ. 1000 நன்கொடையாகக் கொடுக்கிறேன். இது 30 நாள்களுக்கு வயிறு நிறைந்த உணவுகளும் மகிழ்ச்சியான தருணங்களும் ஆகும். இந்த தீபாவளியில் நீங்களும் ஏன் என்னுடன் இணையக் கூடாது?

இதற்காக ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு ஆயிரம் வழங்கி நிதியுதவி செய்யுங்கள். ஒரு நாயின் உணவுக்கு ஆதரவளித்து அவைகளின் வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Trisha has made a new request ahead of Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.