வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய விலையில் உரம் விற்பனை
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக, சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமீப காலமாக உரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலையை அனைத்து உர நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன.
எனினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் "டான்பெட்" மூலமாக தற்போது இருப்பில் உள்ள உரங்கள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பழைய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கிப் பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.