FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

இருங்காட்டுக் கோட்டையில் தனியாா் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து குறித்து...

இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தீ - எக்ஸ்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியாா் எலக்ட்ரானிக்ஸ் உதரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே,பணியில் இருந்த தொழிலாளா்கள் அனைவரும் பத்திரமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ மளமளவென தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும், தீ விபத்தால் அதிமான கரும்புகை வெளியேறியதால் சிப்காட் பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா், படப்பை மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

summary

Fire Accident at Private Factory in Irungattukottai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments