முகப்பு
சேலம்

கெங்கவல்லி வட்டாரத்தில் துவக்கப் பள்ளிகளில் பாடம் நடத்திய சத்துணவு அமைப்பாளர்கள்

கெங்கவல்லி வட்டாரத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்  85 சதவீதம் பேர் பணிக்கு வராததால் சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:48 am IST
பகிர்:

கெங்கவல்லி வட்டாரத்தில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்  85 சதவீதம் பேர் பணிக்கு வராததால் சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்பட்டது.
ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஜனவரி 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கியுள்ளனர். கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள 37 துவக்கப் பள்ளிகள், 11 நடுநிலைப்பள்ளிகள், 10 உண்டு உறைவிட பள்ளிகள், மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் 61 பள்ளிகள் உள்ளன.
இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் 85 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அரசு அலுவலகங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்  85 சதவீதம் பேர் பணிக்கு வராததால், துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்  சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்பட்டது.
சத்துணவு அமைப்பாளர்களே கரும் பலகைகளில் பாடக் கருத்துகளை எழுதி, பாடம் நடத்தினர். நடுநிலைப் பள்ளிகளை, சிறப்பாசிரியர்களைக் கொண்டும்  இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.