விநாடி- வினா போட்டி: சோனா கல்லூரி முதலிடம்
சேலத்தில் மண்டல அளவில் நடைபெற்ற ஷடாடா க்ரூசிபிள் கேம்பஸ் விநாடி-வினா 2019 போட்டியில் சோனா
சேலத்தில் மண்டல அளவில் நடைபெற்ற ஷடாடா க்ரூசிபிள் கேம்பஸ் விநாடி-வினா 2019 போட்டியில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி குழு முதல் இரண்டு இடங்களைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.
சேலத்தில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் மொத்தம் 206 குழுக்கள் பங்கேற்றன. இதில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரி ஆகியோர் முதலிடம் பெற்று ரூ.75 ஆயிரம் வென்றனர். மேலும், மண்டல அளவில் வெற்றிபெற்ற தேசிய அளவிலான இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, சோனா கல்லூரியைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் கிருத்திகா ஆகியோர் 2-ஆவது இடம் பெற்று ரூ.35 ஆயிரம் பெற்றனர். நாட்டில் 5 மண்டலங்களில் முன்னணியில் உள்ளவர்கள் மும்பையில் நடைபெறும் தேசிய இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பர். தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசும், டாடா க்ரூசிபிள் கோப்பையும் வழங்கப்படும்.