நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
தோனி மனைவி சாக்ஷி குறித்து ஜெயராம்....
நடிகர் ஜெயராம் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயராம். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளத்தில் பெரிய இடத்தைப் பிடித்தார். ஒரே நேரம் மலையாள சினிமாவிலும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவே உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான கதாபாத்திர நடிகராகவும் அசத்தி வருகிறார். இறுதியாக, கர திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் நடித்த பரிமளா அண்ட் கோ ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜெயராமிடம், நீங்கள் சந்தித்ததில் உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார் எனக் கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயராம், “ஒருநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைக் காண சேப்பாக்கம் மைதானம் சென்றபோது திடீரென கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி என்னை நோக்கி வந்து என் காலில் விழுந்து, நான் உங்களின் பெரிய ரசிகை என ஆசிர்வாதம் வாங்கினார். நான் யாரெனத் தெரியாமல் காலில் விழுந்துவிட்டாரா என சிறிய நெருடலுடன் என்னைப் பற்றி சொன்னேன். அதற்கு சாக்ஷி, என் மகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர் மலையாளி. அவர் எப்போதும் என் மகளைத் தூங்க வைக்க, நீங்கள் நடித்த அத்வைதம் படத்தில் இடம்பெற்ற, “அம்பலபுழை உன்னி கண்ணனோடு..” பாடலைப் பாடித்தான் தூங்க வைப்பார். அதைக் கேட்காமல் என் மகளும் தூங்க மாட்டாள்.” என்றார். நான் எப்போதோ நடித்த படத்தின் பாடலால் சாக்ஷி எனக்கு ரசிகையாக இருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறினார்.
Actor Jayaram has spoken movingly about cricketer Dhoni's wife.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.