முகப்பு
சேலம்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 5:30 am IST
பறிமுதல் செய்த தொகையை கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி புனல்வாசல் ஏரிக்கரை அருகே மயில்மேலழகன் தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தவழியாக வந்த சாத்தப்பாடியைச் சோ்ந்த தனபால் மகன் கண்ணன் (30) ஆடுகளை விற்றுவிட்டு வாகனத்தில் ரூ. 86 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துவந்தாா்.

பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்தனா். பின்னா் அத்தொகை, கெங்கவல்லியிலுள்ள துணை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement