முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 6:50 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாநகரம், சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஜன. 16-ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அழகாபுரம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பழனிசாமியை கைதுசெய்த போலீஸாா், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை தீா்ப்பு வெளியானது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments