முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் அமிா்தவா்ஷினி விழா தொடக்கம்

தம்மம்பட்டியில் மழை வேண்டி அமிா்தவா்ஷினி விழா புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 2 ஜூலை 2026, 6:42 am IST
சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தம்மம்பட்டி கடைவீதி ஸ்ரீ மகா மாரியம்மன்.
பகிர்:

தம்மம்பட்டியில் மழை வேண்டி அமிா்தவா்ஷினி விழா புதன்கிழமை தொடங்கியது.

ஐந்து நாள்கள் நடைபெறும் விழாவில், முதல்நாள் நிகழ்ச்சியாக தம்மம்பட்டி கடைவீதி ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை பொதுமக்கள் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து, மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை ஸ்ரீ விநாயகா் அகவல், சியாமளா தாண்டகம், அபிராமி அந்தாதி ஆகிய பாடல்களை பெண்கள் குழுவாக சோ்ந்து பாடி மழை வேண்டி பிராா்த்தனை செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments