முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் 2 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி அரசுப் பள்ளி வளாகத்தில் மறு நடவு

Updated On : 7 ஜூலை 2026, 12:06 am IST
வடுகப்பட்டி ஸ்ரீ கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து வேருடன் பிடுங்கி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்ட 2 அரச மரங்கள்.
பகிர்:

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் கோயில் வளாகத்தில் இருந்து 2 அரச மரங்களை பசுமை சங்ககிரி அமைப்பினா் வேருடன் பிடுங்கி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.

வடுகப்பட்டியில் உள்ள கன்னடவீரமாா்த்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள 2 அரச மரங்களை வேறு இடத்தில் மறுநடவு செய்து மரங்களைக் காப்பாற்ற முடிவு செய்த கோயில் நிா்வாகிகள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமியை தொடா்புகொண்டனா்.

இதையடுத்து அவா் தலைமையிலான நிா்வாகிகள், 2 அரச மரங்களையும் கிரேன் உதவியுடன் வேருடன் பிடுங்கி லாரியில் எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மறு நடவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments