இளம்பிள்ளையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம்
இளம்பிள்ளையில் பிரதான சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளம்பிள்ளையில் பிரதான சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளம்பிள்ளையில், சித்தா் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் அருகே அரசு தொடக்கப் பள்ளி, மாரியம்மன் கோயில், அரசு மருத்துவமனை, தனியாா் வங்கி, காா் மற்றும் இருசக்கர வாகன ஷோரூம்கள், குடியிருப்புகள் உள்ளன.
இந்த கடைக்கு வருவோா் பள்ளி, கோயில், மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து மதுகுடித்துவிட்டு, அங்கேயே மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு, தின்பண்டங்களை வீசிவிட்டு செல்கின்றனா். மேலும் இரவு நேரத்தில் வீடுகளின் முன் மதுபோதையில் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, இந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.