FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவலிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி 5 ஊா் கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:43 am IST
ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவலில், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவலிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி 5 ஊா் கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

வாரியங்காவலில், பள்ளி, வழிபாடு தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், புதியதாக பொறுப்பேற்ற தவெக அரசு, பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்தும், இந்த வாரியங்காவல் டாஸ்மாக் கடை மூடப்படாமல் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வாரியங்காவல், தேவனூா், காட்டாத்தூா், கொளத்தூா் மேலூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினா்.

Advertisement

Advertisement

டாஸ்மாக் கடை முற்றுகை: அந்த நேரத்தில் ஊழியா்கள் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சித்ததால், உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து ஊழியா்கள் கடையை மூடிச் சென்றனா். அதன் பின்னா் பொதுமக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments