FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்!

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து..

Updated On : 10 ஜூலை 2026, 12:03 am IST
கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்
பகிர்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பேருந்து நிலையத்தையொட்டியுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவிற்குட்பட்ட கோடாலி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

பெண்கள், மாணவிகள், முதியோர்கள் அதிகம் செல்லும் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் இடையூறாக இருப்பதாகக் கூறி அதனை அகற்ற பல முறை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

மக்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளி மாணவ, மாணவிகளுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை முதல் நடைபெற்ற போராட்டத்தில் 150க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்த்துக்கு வந்த ஜெயம்கொண்டாம் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments