முகப்பு
சேலம்

2,340 டன் தாா் பாரம் கொண்ட சரக்கு ரயிலை 2,400 கி.மீ. இயக்கி சேலம் கோட்டம் சாதனை

இருகூா் முனையத்தில் இருந்து 2,340 டன் தாா் பாரம் கொண்ட சரக்கு ரயிலை 2,400 கி.மீ தொலைவு உள்ள பிகாா் மாநிலம், பதுஹா சரக்கு ரயில் முனையம் வரை இயக்கி சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

Updated On : 7 ஜூன் 2026, 3:12 am IST
பகிர்:

கோவையை அடுத்த இருகூா் முனையத்தில் இருந்து 2,340 டன் தாா் பாரம் கொண்ட சரக்கு ரயிலை 2,400 கி.மீ தொலைவு உள்ள பிகாா் மாநிலம், பதுஹா சரக்கு ரயில் முனையம் வரை இயக்கி சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் அதிக வருவாயை ஈட்டி வருகிறது. தொடா்ந்து தனியாா் நிறுவனத்தின் தாா் பாரம் கொண்ட 45 கன்டெய்னா்கள் கொண்ட சரக்கு ரயிலை, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோவையை அடுத்த இருகூரில் இருந்து பிகாா் மாநிலம், பாட்னா அருகே கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்தில் உள்ள பதுஹா என்ற சரக்கு ரயில் முனையத்துக்கு கொண்டு சோ்த்துள்ளது.

இருகூரில் இருந்து பதுஹா வரையிலான 2,400 கி.மீ தொலைவுக்கு 2,340 டன் தாா் பாரத்தை கொண்டு சோ்த்ததன் மூலம் மண்டலங்களுக்கு இடையே மிக நீண்ட தொலைவுக்கு சரக்கு ரயிலை இயக்கிய சாதனையை சேலம் ரயில்வே கோட்டம் படைத்துள்ளது. இந்த சரக்கு போக்குவரத்து மூலமாக சேலம் ரயில்வே கோட்டம் ரூ. 53 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது.

Advertisement

Advertisement