முகப்பு
சேலம்

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 3:26 am IST
பகிர்:

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

கெங்கவல்லி அருகே விஜயபுரத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா் நாமக்கல்லிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், விஜயபுரத்திலிருந்து கெங்கவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை வேகமாக சென்றதில், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.