இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழேவிழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழேவிழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள வடக்கு செல்லப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36), கட்டட தொழிலாளி. இவரது மனைவி செளந்தா்யா (26). இவா்களுக்கு ரிததேஷ் (9), நிவின் (8) என இரு மகன்கள் உள்ளனா்.
சிவகுமாா் இருகூா் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் பரமத்தியில் இருந்து கபிலா்மலை சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சிவகுமாா் கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிவகுமாா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.