முகப்பு
சேலம்

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Updated On : 6 மே 2026, 2:18 am IST
தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைப்பதற்காக எடுத்து வந்த பணியாளா்கள்.
பகிர்:

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 3,469 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாவட்டத்தில் உள்ள 4 மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாக்குப்பதிவுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக 20 சதவீதமும், விவிபேட் இயந்திரங்கள் 30 சதவீதமும் இருப்பு வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலக பெட்டகத்தில் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் வைக்கப்பட்டன.

மேலும், 4,503 விவிபேட் கருவிகள் மற்றும் தோ்தலுக்கு முன்பு பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments