முகப்பு
மதுரை

மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது

  மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பெண் ஒருவர், மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலூரைச் சேர்ந்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 12 மே 2013, 5:59 am IST
பகிர்:

  மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பெண் ஒருவர், மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலூரைச் சேர்ந்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

  மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி மீனாட்சி (38).

இவர்கள் இட்லி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மீனாட்சி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மேலூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

Advertisement

Advertisement

  இக்கொலை தொடர்பாக, மேலூர் கோட்டைக்கிணற்றுத் தெருவைச் சேர்ந்த மணி மகன் வெங்கடேஷ் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.

  இவர், மீனாட்சியுடன் செல்போனில் பேசியதை வைத்து கொலையில் ஈடுபட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும், வெங்கடேஷுக்கு செல்போன் கொடுத்தும், மோட்டார் சைக்கிள் கொடுத்தும் உதவியதுடன், மீனாட்சி கொலை செய்யப்பட்ட பின்னர் தடயங்களை மறைக்கவும் உதவியதாக, மூவன்சேவல்பட்டியைச் சேர்ந்த அம்பலம் மகன் செந்தில்குமாரையும் (37) போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர், மேலூர் தெற்குப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.

  8 மாதங்களுக்கு முன், நொண்டிக்கோவில்பட்டியில் உறவினர் ஒருவர் இறந்ததால், துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களுடன் மீனாட்சி வந்திருந்தாராம். அப்போது, வெங்கடேஷின் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

  சம்பவத்தன்று, மீனாட்சி மேலூர் வந்துள்ளார். அப்போது, வெங்கடேஷுடன் தகராறு ஏற்பட்டதை அடுத்து, கொலை செய்யப்பட்டுள்ளார். மீனாட்சிக்கு மகன், மகள் உள்ளனர். அதேபோன்று, வெங்கடேஷுக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

  எனவே, வெங்கடேஷ் மற்றும் அவருக்கு உதவிய செந்தில்குமார் ஆகிய இருவரும், மேலூர் நீதித்துறை நடுவர் மகேஷ்பூபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.