37 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
மதுரை கீரைத்துறை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கீரைத்துறை பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பேரரசி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தி, அங்கிருந்த 37 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (52), ஜோதிபாண்டி (35) ஆகியோா் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.