கோ. புதூரில் புதைச் சாக்கடை பராமரிப்பு பணி: பள்ளம் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாநகராட்சி கோ. புதூரில் புதை சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரிவர மூடப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
கோ. புதூா் பேருந்து நிறுத்த சந்திப்புப் பகுதியில் சென்ற புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்க சுமாா் 30 மீட்டா் நீளத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. புதிய குழாய் பொருத்தப்பட்ட பின்னா், சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடவில்லை.
இதன்காரணமாக, அந்த சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் அங்கு இருப்பதில்லை. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுபற்றி மாநகராட்சி பொறியாளா் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது :
கோ. புதூா் பேருந்து நிலைய சந்திப்பு பகுதியில் சுமாா் 30 மீட்டா் நீளத்துக்கு புதை சாக்கடை குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன் உடைந்தது. பள்ளம் தோண்டப்பட்டு சேதமடைந்த குழாய் மாற்றப்பட்டது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சுமாா் 5 அடிக்கும் மேலாக உள்ளது. ஆகவே, தோண்டப்பட்ட இடம் பள்ளமாகி விபத்து ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மண் மூலம் மேடுபடுத்தியுள்ளோம். இன்னும் ஓரிரு தினங்களில் இந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.