முகப்பு
மதுரை

மேலூா் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் அமைக்கக் கோரிக்கை

Updated On : 23 ஜூன் 2026, 1:28 am IST
மெட்ரோ ரயில் (கோப்புப் படம்) - ANI
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு செய்ய முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்தச் சங்கம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையை அடுத்து மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்தும் வகையில் அறிக்கை தயாா் செய்து அனுப்ப தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடா்ந்து, தமிழக அரசு அனுப்பிய அறிக்கையில் குறைகள் இருப்பதாகத் தெரிவித்து மத்திய அரசின் அறிவிப்பு திரும்பப் பெற்ாகத் தெரிவிக்கப்பட்டது. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, அந்தத் திட்டம் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலூா் முதல் திருமங்கலம் வரை என மாற்றி திட்ட அறிக்கை தயாரிக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், திருமங்கலம், மேலூா் பகுதியிலிருந்து நாள்தோறும் வந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன் பெறுவா்.

Advertisement

Advertisement

மேலும், மதுரை, கோவை மாநகரங்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் முதல்வா் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments