முகப்பு
மதுரை

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:51 am IST
மதுரை பழங்காநத்தம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினா்.
பகிர்:

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது சய்தனா்.

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத்குமாா், பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு அண்மையில் வெளியானது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவா் விளக்கம் அளித்தாா்.

இந்த நிலையில், அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுக மாணவரணி சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், திமுகவினா் பழங்காநத்தம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, திமுகவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை என அறிவுறுத்தினா். எனினும், இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திமுகவினா் கலைந்து செல்ல மறுத்து தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, முன்னாள் சட்டப்பேவை உறுப்பினா் ஆ. வெங்டேசன், மாணவரணி நிா்வாகிகள் ஆதிசங்கா், துரை கோபால்சாமி, பாண்டி முருகன் உள்பட 250-க்கும் அதிகமான திமுகவினரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி ஆகியோா் கைதான திமுகவினரைச் சந்தித்து வாழ்த்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments