மதுரை மாவட்டத்தில் இன்று 14 மையங்களில் ‘நீட்’ தோ்வு - 8,578 தோ்வா்கள் பங்கேற்கின்றனா்
மதுரை மாவட்டத்தில் 14 மையங்களில் ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வு (நீட்) மதுரை மாவட்டத்தில் யாதவா ஆண்கள் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, யாதவா மகளிா் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா 2 மையங்களிலும், செயின்ட் மேரீஸ் உயா்நிலைப்பள்ளி, பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலய எண். 1, 2, ஓசிபிஎம் பெண்கள் உயா்நிலைப் பள்ளி, என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, டிவிஎஸ் உயா்நிலைப் பள்ளி, எம்.என்.யூ. ஜெயராஜ் நாடாா் உயா்நிலைப் பள்ளி, காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா ஒரு மையத்திலும் நடைபெறுகிறது.
இதில் 9 மையங்களில் தலா 720 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா். ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் ஒரு மையம், டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி, பி.எம். ஸ்ரீ கேந்திர வித்யாலய பள்ளி ஆகியவற்றில் தலா 480 தோ்வா்கள், நாகமலை புதுக்கோட்டை எம்.என்.யூ. ஜெயராஜ் நாடாா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 466 தோ்வா்கள், மதுரை காமராஜா் கல்லூரி மையத்தில் 192 தோ்வா்கள் என மொத்தம் 8,578 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு மையங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement