முகப்பு
மதுரை

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

Updated On : 4 மே, 2026 at 2:00 AM
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உத்தீஸ்வரி.
பகிர்:

மதுரை, மே 3: ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், டெஸின் அகாதெமி ஆகியன சாா்பில் ஓவியக் கண்காட்சி, ஓவியப் போட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உத்தீஸ்வரி தலைமை வகித்தாா். டெஸின் அகாதெமி மேலாளா் லோககீத மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதுதவிர, சிறந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில், ஆசிரியை சத்தியப் பிரியா, மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.