முகப்பு
திண்டுக்கல்

பழனி கல்லூரியில் மூலிகைத் தாவர கண்காட்சி

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் இரண்டு நாள் மூலிகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:41 am IST
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் இரண்டு நாள் மூலிகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி தொடக்கி வைத்தார். துறைத் தலைவர் ஆனந்தி வரவேற்றார். கண்காட்சியில் உப்புக்கொல்லி, சர்க்கரைக் கொல்லி, நாகமல்லி, கோபுரந்தாங்கி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, கேசவர்த்தினி, ஆகாசக்கருடன், கருங்குறிஞ்சி, நீர் மேல் நெருப்பு, திப்பிலி, வெற்றிலை, வெளளருகு, மருகு, மாசிப்பச்சை,  கரு ஊமத்தை, கள்ளிமுளையான் போன்ற அரியவகைத் தாவரங்கள் உள்பட 180 வகையான மூலிகைத் தாவரங்களும்,  நவக்கிரகங்களுக்கான தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தாவரங்களையும் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.  
மூலிகைத் தாவரங்களின் மருத்துவப்பயன்கள் பற்றி கண்காட்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விளக்கப்பட்டது. மேலும் இக்கண்காட்சியில் மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரித்தல், காளான் வளர்த்தல், பாட்டி வைத்திய மகத்துவம், தாவரங்களை இனம் கண்டறிதல், நாகரிகமயமாதலால் இயற்கைக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது. 
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை பார்க்க வந்தவர்களுக்கு 35 வகையான விதைகள் கொண்ட பைகள் வழங்கப்பட்டது. 
ஏற்பாடுகளை பேராசியர்கள் ரத்தினசாமி, மயில்சாமி,  விக்னேஸ்வரன், ஜெயசித்ரா,  சிபு,  மேனகா, கண்ணதாசன், கார்த்திக்குமரன் மற்றும் துறை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments