முதல்வர் விஜய்யை த்ரிஷா அன்ஃபாலோ செய்தது ஏன்?
முதல்வர் விஜய்யை த்ரிஷா அன்ஃபாலோ செய்தது ஏன்? என்பதைப் பற்றி...
விஜய்யை த்ரிஷா அன்ஃபாலோ செய்தது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
நடிகரும் முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பெயர் குறிப்பிடாத நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். விஜய் - சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில் ஏஜிஎஸ் சினிமாஸ் குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண விழாவில், நடிகர் விஜய் - த்ரிஷாவுடன் முதல்முறையாகக் கலந்துகொண்டார். ஒரே நிற பட்டாடையில், ஒரே காரில் வந்த இருவரும் கலந்துகொண்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளான நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக செயல்பட்டார். தேர்தல் முடிவுகள் நாளில், விஜய்யின் தவெக முன்னிலையில் இருந்த நிலையில், முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார் த்ரிஷா.
அதைத்தொடர்ந்து முதல்வராக விஜய்யின் பதவியேற்பு விழாவிலும், நடிகர் அஜித்குமாரின் தாயாரின் இறப்பு நிகழ்விலும் த்ரிஷா கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவையிலும் விஜய்க்கு உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா இம்முறை எந்த வாழ்த்து பதிவும் வெளியிடவில்லை.
அதேநேரம், பலரும் முதல்வர் விஜய்க்கு நடிகை த்ரிஷா வாழ்த்துத் தெரிவிப்பாரா? எனக் காத்திருந்து, என்ன சொல்லப் போகிறார் என்கிற பதற்றமும் கட்சியினரிடமும், ரசிகர்களிடமும் இருந்தது. ஆனால், த்ரிஷா முதல்வர் விஜய்யின் பிறந்த நாளுக்கு எந்த வாழ்த்து தெரிவிக்கவில்லை என குழப்பத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் விஜய்யை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும், இருவருக்குமிடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டதா? வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்ற பேச்சுக்கு மத்தியில், ஆனால் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார் என வலைதளங்களில் நேற்றுமுதல் விவாதம் எழுந்தது.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், நேற்றிரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன், கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் கடும் விவாதத்தையும் தூண்டியது.
இதற்கு மத்தியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை, என்றைக்குமே த்ரிஷா ஃபாலோ செய்ததே இல்லை என்றும், அப்படி இருக்கும்போது எப்படி அன்ஃபாலோ செய்ய முடியும்? விஜய்யை மட்டுமல்ல, தன்னுடன் நடித்த எந்த ஹீரோக்களையும் த்ரிஷா இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
கடைசியாக தான் நடித்த ‘கருப்பு’ படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பின்தொடரும் த்ரிஷா அந்தப் படத்தின் ஹீரோவான சூர்யாவை பின் தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
A lot has been said about Trisha Krishnan and Thalapathy Vijay’s relationship that went viral after the two made an appearance together at a wedding in Chennai few months back.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.