சாலையெங்கிலும் முதல்வரை வரவேற்ற மக்கள்!
புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் சாலையெங்கிலும் முதல்வர் விஜய்யை மக்கள் வரவேற்றது குறித்து...
புதுக்கோட்டைக்கு செல்லும் முதல்வர் விஜய்யை சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் திங்கள்கிழமை (நவ. 2) வரவேற்றனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் திருச்சி வந்தடைந்தார். பின்னர், திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 55 கி.மீ தூரம் வாகனத்தில் செல்லும் முதல்வர் விஜய்யை சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
பல இடங்களில் மக்கள் முதல்வர் விஜய்யின் வாகனத்தின் மீது மலர் தூவி வரவேற்றனர்.
On Monday (Nov. 2), people gathered on both sides of the road to welcome Chief Minister Vijay as he traveled to Pudukkottai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.