அமோனியா கசிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டவர்! ஆந்திரத்தில் உயிருடன்! ஆதார் மோசடி
அமோனியா வாயு கசிவில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திரத்தில் உயிருடன் இருப்பது தொடர்பாக..
தமிழகத்தில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திரத்தில் உயிருடன் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் உள்ளிட்ட கடல் மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அமோனியா வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 65-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனர். இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒடிசாவை சேர்ந்த ஏழு பேரும், அஸ்ஸாமை சேர்ந்த இருவரு ஆவர்.
அமோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், தொழிலாளர்கள் பலர் போலியான ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வேலைக்குச் சேர்ந்தது தொடர்பான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாயு காசி சம்பவத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திரத்தில் உயிருடன் உள்ளார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா மாநிலப் பெண், ஆந்திரத்தில் உயிருடன் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இது தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்துக் கடுமையாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கியோஞ்சர் பகுதியில் உள்ள தொழிலாளர் மற்றும் இஎஸ்ஐ துறை நடத்திய விசாரணையில் தொழிற்சாலையில் பல தொழிலாளர்களுக்கு வேலை பெற்றுத் தருவதற்காக மற்ற நபர்களுக்குச் சொந்தமான ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததுள்ளது. இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தற்போது தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா என்பவரை போலீஸார் தேடி வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவதன்படி, போலியான அல்லது மற்றவர்களின் ஆதார் ஆவணங்களைப் பயன்படுத்திச் சில பெண்களுக்கு ஸ்ரீகாந்த் வேலை ஏற்பாடு செய்துள்ளார். ஆதார் அட்டைகள் இல்லாத இளம் பெண்களுக்கு, மற்ற நபர்களுக்குச் சொந்தமான ஆவணங்களை ஸ்ரீகாந்த் வழங்கியதாகக் கூறப்படுகிறது,.
ஒடிசாவைச் சேர்ந்த ஏழு பேர், அஸ்ஸாமைச் சேர்ந்த இருவர் என மொத்தம் ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. ஆனால், இறந்தவர்களில் ஒருவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், ஆறு பேர் உயிரிழந்ததை மட்டுமே ஒடிசா அரசால் உறுதிப்படுத்த முடிந்தது. இறந்ததாகக் கருதப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
A govt probe into the Tamil Nadu ammonia gas leak tragedy has revealed an Aadhaar card racket where multiple labourers have been securing jobs using one or even fictitious cards.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.