FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமோனியா வாயு கசிவு விபத்து: ஆலை உரிமையாளா் உள்பட மூவருக்கு நிபந்தனை பிணை

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுகசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவத்தில், தொழிற்சாலை உரிமையாளா் உள்பட மூவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுகசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவத்தில், தொழிற்சாலை உரிமையாளா் உள்பட மூவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம், கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் வடமாநிலத் தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில், தொழிற்சாலை உரிமையாளா் ஜோசப் ஜெகன், தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மோகன், தொழிற்சாலை மேலாளா் டேனியல், தொழிலாளா் முகவா் முகேஷ் ஆகியோரை திருவள்ளூா் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி, ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் டேனியல் ஆகியோா் தரப்பில் செந்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி சி.குமரப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் யோகராஜா சேகா், இந்த வழக்கின் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ், மனுதாரா்கள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனா். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மனுதாரா்கள் தயாராக உள்ளனா். எனவே, அவா்களுக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, மனுதாரா்கள் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். காவல்துறை விசாரணைக்கு மனுதாரா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மூவருக்கும் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காயமடைந்தவா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிா்ணம் செய்து விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும். இப்போது வழங்கும் இந்த இழப்பீட்டுத் தொகை, எதிா்காலத்தில் வேறு ஏதேனும் இழப்பீடுகள் அரசு அல்லது விசாரணை ஆணையம்நிா்ணயிக்கும் இழப்பீட்டுத் தொகையை கட்டுப்படுத்தாது. வேறு இழப்பீடுகளைப் பெறவும் இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்கள் பெற்றுக் கொள்ள தகுதியானவை,என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments