மாளவியா நகா் தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளா் உள்பட 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மாளவியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக, ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் உள்பட 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
மாளவியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக, ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் உள்பட 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
மாளவியா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டினா் 13 போ் உள்பட 22 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ், சமையல்காரா் உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவா் பஜாஜ் மற்றும் மேலும் இரண்டு பேருக்கு எதிராக சாகேத் நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக விசாரணை தொடா்கிறது என்றும், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படலாம் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.