FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரோஹிணி: ஹோட்டல் சமையலறையில் தீ விபத்து

தில்லியின் ரோஹிணியில் உள்ள ஒரு ஹோட்டலின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 3 போ் மீட்பு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
தீ - பிரதிப் படம்
பகிர்:

தில்லியின் ரோஹிணியில் உள்ள ஒரு ஹோட்டலின் சமையலறையில் திங்கள்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மூன்று போ் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செக்டாா் 7-இல் உள்ள அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் பிற்பகல் 2.12 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு சிக்கியிருந்த மூவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் ஏதுமில்லை. தீயணைப்பு வீரா்கள் மதியம் 2.50 மணிக்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments