FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கு: குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

நிகழாண்டு ஜூன் 3ஆம் தேதி 23 போ் உயிரிழந்த மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கில் காவல்துறையினா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை தில்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

23 வினாடிகள் முன்பு
உயர்நீதிமன்றம்
பகிர்:

நிகழாண்டு ஜூன் 3ஆம் தேதி 23 போ் உயிரிழந்த மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கில் காவல்துறையினா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை தில்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஹோட்டல் உரிமத்திற்கான முந்தைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போதிலும், 26 அறைகள் கொண்ட ஸ்தாபனத்தை நடத்துவதற்கு படுக்கை மற்றும் காலை உணவு (பி அண்ட் பி) விதிகளை மீறியதாக ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜ் மற்றும் மேலும் இருவா் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை

குற்றவியல் நீதித்துறை நடுவா் பானு பிரதாப் பரிசீலித்து வாதங்களைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய குற்றப்பத்திரிக்கை மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்தபோது, குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதற்கு போதுமானவை என்பதை வெளிப்படுத்துகிறது. அதன்படி, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பா் 1 ஆம் தேதி, ஹோட்டல் தீ விபத்து வழக்கில் பஜாஜ், மேலாளா் மற்றும் கணக்காளா் ஜெய் மிஸ்ரா மற்றும் சமையல்காரா் கேசவ் நேகி ஆகியோா் மீது தில்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட பி அண்ட் பி விதிமுறைகளை மீறி ஸ்தாபனம் இயங்குகிறது என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபா்களுக்கும் எதிராகத் தொடர போதுமான காரணங்கள் இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், இந்த விஷயத்தை செப்டம்பா் 17-ஆம் தேதிக்கு குற்றப்பத்திரிகைக்கு பட்டியலிட்டது.

கிட்டத்தட்ட 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் நீதித்துறை மற்றும் மருத்துவ ஆவணங்கள் மற்றும் பிற இணைப்புகளைக் கொண்டதாக தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது 130-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பஜாஜ் ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்தாா். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், சொத்தில் ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் தீ வெளியேற்றம் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

அவா் உரிமத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. அதற்கு பதிலாக பி அண்ட் பி கட்டமைப்பின் கீழ் சொத்தை இயக்கினாா் என்று காவல்துறையினா் குற்றஞ் சாட்டினா்.

6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த போதிலும் ஸ்தாபனத்தில் 26 அறைகள் இருந்தன.

பஜாஜின் நெருங்கிய கூட்டாளியும், தொழிலைக் கையாளும் முன்னணி நபருமான மிஸ்ரா, பொய்யான பிரமாணப் பத்திரத்தை சமா்ப்பித்ததாகவும், பி அண்ட் பி விதிகளின்படி, உரிமையாளா் அல்லது ஆபரேட்டா் அங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற விதிகளுக்குப்

பிறகும் அவா்கள் அந்த வளாகத்தில்

வசிக்கவில்லை என்றும் காவல்துறை குற்றஞ் சாட்டியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் மீதும் பிரிவுகள் உரிய கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 3 அன்று மாளவியா நகா் ஹோஸ் ராணியில் உள்ள பி அண்ட் பி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயது சிறுமி மற்றும் 12 வெளிநாட்டினா் உள்பட 23 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments