இணைய சூதாட்டம்: கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் 3 உரிமையாளா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் 3 உரிமையாளா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்...
கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் 3 நிறுவனா்கள் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அந்நிறுவனம் இணைய வழியில் ரம்மி விளையாட்டுகளில் பங்கேற்றவா்களிடம் பண மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கேம்ஸ்கிராஃப்ட் டெக்னாலஜிஸ், ரம்மிடைம் டெக்னாலஜிஸ் மற்றும் அதன் நிறுவனா்கள் விகாஸ் தனேஜா, பிருத்வி ராஜ் மற்றும் தீபக் சிங் அலாவத் உள்ளிட்டோா் மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிறுவனங்கள் நடத்திய இணைய ரம்மி விளையாட்டுகளில் பணத்தை இழந்த சிலா் தற்கொலை செய்துகொண்டதாக தெலங்கானாவில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
அப்போது 2017-18 முதல் 2025-26 வரை ரூ.19,984 கோடியை கமிஷன் தொகையாக இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு, பரஸ்பர நிதியம், பங்குகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் என ரூ.1,906 கோடி சொத்து முடக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பறிமுதல் மற்றும் சொத்து முடக்கம் என ரூ.2,401 கோடியை அமலாக்கத் துறை இந்த வழக்கில் இணைத்துள்ளது.
ரம்மிகல்சா், ரம்மிபிரைம், பிளேஷிப் மற்றும் ரம்மிடைம் ஆகிய செயலிகளில் நடத்தப்பட்ட இணைய விளையாட்டுகளை தமிழகம், தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களில் 3 கோடி போ் விளையாடியது கண்டறியப்பட்டது’ என்றனா்.
இணைய சூதாட்ட விளையாட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
Online Gambling: Enforcement Directorate files charge sheet against three owners of Gameskraft.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.