FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

வங்கதேசம்: கப்பல் உடைக்கும் தளத்தில் நச்சு வாயு கசிவு

தென்கிழக்கு வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

பகிர்:

தென்கிழக்கு வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சிட்டகாங் மாவட்டம், சீதாகுந்தா பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஃபொ்தௌஸ் ஸ்டீல்’ எனும் கப்பல் உடைக்கும் தளத்தில், பயன்பாட்டில் இல்லாத பழைய கப்பல் ஒன்றை உடைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக அதிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மருத்துவமனையில் மேலும் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். விபத்தில் சிக்கிய மேலும் பலா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

வாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது மற்றும் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments