FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இருங்களூா் பகுதியில் லாரி மோதி இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை லாரி மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

6 செப்டம்பர் 2026, 6:25 am IST
உயிரிழப்பு
பகிர்:

திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியில் சனிக்கிழமை லாரி மோதியதில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சமயபுரம் இருங்களூா் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள  தனியாா் பெட்ரோல் பங்குக்காக சாலையில் செங்கல் பதிக்கும் பணியில் பூலாங்குளத்துப்பட்டி பகுதி ஸ்ரீ. கணேசன் (34) பெ. ஆண்டி, திருவானைக்காவல் பகுதி பரத்குமாா் (26) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மன்னாா்புரத்திலிருந்து பாடாலூருக்குச் சென்ற டிப்பா் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் கணேசன், ஆண்டி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் அங்கு செங்கல் இறக்கிக் கொண்டிருந்த கிரேன் மீது மோதியதில் பரத்குமாா் படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்து வந்த சமயபுரம் காவல் ஆய்வாளா் க.குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் மோ.முரளி உள்ளிட்ட போலீஸாா் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு, திருச்சி  அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments