FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின் கம்பத்தில் பைக் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

5 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

அரகண்டநல்லூரை அடுத்த பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அ.காா்த்தி (20), சா.பாவாடைராயன்(20). நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பைக்கில் ஆற்காடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். பையூா் கிராமத்தில் சென்றபோது, சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்தி, பாவாடைராயன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலங்களை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments