முகப்பு
திண்டுக்கல்

மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு "கட்செவி அஞ்சல்' வசதி

பொதுமக்கள் தகவல் பெறவும், புகார் தெரிவிக்கவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்செவி அஞ்சல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:40 am IST
பகிர்:

பொதுமக்கள் தகவல் பெறவும், புகார் தெரிவிக்கவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்செவி அஞ்சல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள், அரசு சேவைகளை உடனுக்குடன் பெறுவதற்கும், முக்கிய தகவல்களை தெரிவிக்கவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75988-66000 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த எண்ணிற்கு தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, இந்த வாய்ப்பினை உரிய முறையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments