முகப்பு
திண்டுக்கல்

செம்பட்டி அருகே கார்-பைக் மோதல்: இளைஞர் சாவு

செம்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர்  உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயம் அடைந்தார்.

Updated On : 24 ஜூலை 2018, 1:02 am IST
பகிர்:

செம்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர்  உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயம் அடைந்தார்.
                 திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள பாளையங்கோட்டை பிரவாண்பட்டியைச் சேர்ந்த ஜெயபால்  மகன் ராஜாமணி (22). ஆத்தூரைச் சேர்ந்த பிச்சைமணி மகன் சிவசர்மா (20). இவர்கள்  இருவரும் நண்பர்கள்.   இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 
 இதில் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டடு பலத்த  காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த ராஜாமணி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். சிவசர்மா தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகிறார்.  
   இது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments