மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசுப் பணியார் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய அரசுத் துறைகளில் நிரப்பப்பட உள்ள 227 மூத்த செயலக உதவியாளர், எழுத்தர் போன்ற குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியார் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுபற்றிய விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4/1/2026 - CONF-5: Departmental Competitive Exam, 2026
Advertisement
Advertisement
தேர்வு: Departmental Competitive Exam, 2026
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறை
1. Central Passport Organisation, Ministry of External Affairs
2. Armed Forces Headquarters Clerical Service
3. Railway Board Secretariat Clerical Service, Ministry of Railways
4. Central Administrative Tribunal
5. Central Vigilance Commission
6. Election Commission of India
7. Forest Survey of India, Ministry of Environment, Forest and Climate Change
8. National Technical Research Organisation
பணி: Junior Secretariat Assistant/Junior Division Clerk
காலியிடங்கள்: 227
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Central Passport Organisation, Ministry of External Affairs - 76
2. Armed Forces Headquarters Clerical Service - 42
3. Railway Board Secretariat Clerical Service - 19
4. Central Administrative Tribunal - 24
5. Central Vigilance Commission - 6
6. Election Commission of India - 12
7. Forest Survey of India, Ministry of Environment, Forest and Climate Change - 4
8. National Technical Research Organisation - 8
9. Directorate General, Defence Estates - 8
10. Office of Development Commissioner, Ministry of Micro, Small & Medium Enterprises - 28
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு மத்திய அரசுத் துறையில் இளநிலைச் செயலக உதவியாளர் அல்லது மேல் பிரிவு எழுத்தராக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் துறைசார் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்த த்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் மாதம்: ஜூலை- ஆகஸ்ட் 2026. தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். பின்னர் ஆன்லைனில் விண்ணப்பித்த நகல் மற்றும் அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜூலை 10 ஆம் தேதிக்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.6.2026
விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director, SSC (North Region),Block No.: 12,
Lodhi Road, New Delhi - 110 003.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Senior Secretariat Assistant /Upper Division Clerk Grade Limited Departmental Competitive Examination, 2025
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.