முகப்பு
திண்டுக்கல்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 13 பேர் காயம்

வேடசந்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமைடந்தனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 7:44 am IST
பகிர்:

வேடசந்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமைடந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. சேலம் மதுரை 4 வழிச்சாலையில், திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர் அடுத்துள்ள கருக்காம்பட்டி பிரிவு அருகே பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த சாமுண்டிவேல்(65), அனில் ஜோசப்(50), முகமது(25), தாமஸ்(26) உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமைடந்தவர்கள் மீட்கப்பட்டு,  வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.