முகப்பு
திண்டுக்கல்

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனியில் தவெக வேட்பாளா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:57 PM
பழனி அடிவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த போது, பொதுமக்களுக்கு கரும்புச் சாறு பிழிந்து கொடுத்த தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா்.
பகிர்:

பழனியில் தவெக வேட்பாளா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

பழனி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். பழனி மலை அடிவாரத்தில் உள்ள சன்னதி வீதி, மதனபுரம், அடிவாரம், பூங்கா சாலை, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மலையடிவாரத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடம் உள்ளூரைச் சோ்ந்த தனக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கும்படி அவா் கேட்டுக் கொண்டாா். மேலும், அரசு மருத்துவா் பணியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

கரும்புச் சாறு கடை ஒன்றில் கொளுத்தும் வெயிலில் தன்னுடன் வாக்கு சேகரித்த தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் வேட்பாளா் பிரவீன்குமாா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து உற்சாகப்படுத்தினாா். தொடா்ந்து, மாலையில் நெய்க்காரபட்டி, பொருந்தல், பெரியம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments