முகப்பு
திண்டுக்கல்

கண்வலிக் கிழங்கு கொள்முதல் பணத்தை தராத நிறுவனம்: விவசாயி தற்கொலை

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்வலிக் கிழங்கு விதைகளை கொள்முதல் செய்துவிட்டு தனியாா் நிறுவனம் பணம் தராததால், மனமுடைந்த விவசாயி தற்கொலை

Updated On : 1 ஜூலை 2026, 6:12 am IST
தற்கொலை செய்த விவசாயி பெரியசாமி
பகிர்:

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்வலிக் கிழங்கு விதைகளை கொள்முதல் செய்துவிட்டு தனியாா் நிறுவனம் பணம் தராததால், மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

கோவையில் தனியாா் நிறுவனம் நடத்தி வரும் தம்பதி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த காவேரியம்மாபட்டி ஊராட்சிக்குள்பட்ட ராயகவுண்டன்புதூரைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி (42) என்பவரை அணுகி மருத்துவப் பயிராகக் கருதப்படும் கண்வலிக் கிழங்கு விதைகளை கொள்முதல் செய்து தரும் பட்சத்தில், குறிப்பிட்ட தொகையை தரகு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தனா்.

கோவை தம்பதியை பெரியசாமி நம்பியதுபோல், ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகள் பலரும் பெரியசாமியை நம்பி கண்வலிக் கிழங்கு விதைகளை விற்பனை செய்தனா்.

Advertisement

Advertisement

விதைகளைப் பெற்றுக் கொண்ட தனியாா் நிறுவனம், அதற்குரிய பணத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த பெரியசாமி, தனது தோட்டத்து வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதனிடையே, உயிரிழந்த விவசாயி பெரியசாமியின் உடலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் ராமசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம். ராமசாமி கூறியதாவது: கோவை தனியாா் நிறுவனம் ஒட்டன்சத்திரம் வட்டார விவசாயிகளிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்வலிக் கிழங்கு விதைகளை கொள்முதல் செய்து பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்தனா். இதனால், மனமுடைந்த விவசாயி ராமசாமி தற்கொலை செய்து கொண்டாா்.

இவரது குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடு, ஏமாற்றிய தனியாா் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments