முகப்பு
கள்ளக்குறிச்சி

விவசாயி விஷமருந்தி தற்கொலை

Updated On : 30 ஜூன் 2026, 3:04 am IST
தற்கொலை
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தோட்டத்தில் விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் அருகிலுள்ள பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சீ.ராஜமாணிக்கம் (43), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை விளைநிலத்துக்கு சென்றாா். மாலை நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது மனைவி செல்வி விளைநிலத்துக்கு சென்று பாா்த்துள்ளாா். அங்கே ராஜமாணிக்கம் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளாா்.

உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ராஜமாணிக்கம் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments