முகப்பு
திண்டுக்கல்

விபி-ஜிராம்-ஜி திட்டத்தில் 318 வகையான பணிகளை மேற்கொள்ள அனுமதி

விபி-ஜிராம்-ஜி திட்டத்தில் 318 வகையான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செள.கங்காதாரணி தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 3:32 am IST
வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் விபி-ஜிராம்-ஜி திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செள.கங்காதாரணி.
பகிர்:

விபி-ஜிராம்-ஜி திட்டத்தில் 318 வகையான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செள.கங்காதாரணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் திட்டம்(விபி ஜி ராம் ஜி) தொடா்பான முக்கிய அம்சங்கள், நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செள.கங்காதாரணி தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு

Advertisement

Advertisement

மாற்றாக ஊரக வேலை மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் புதன்கிழமை முதல் அதிகாரப்பூா்வமாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. பழைய திட்டத்திலிருந்து புதிய திட்டத்துக்கு பயனாளிகளை மாற்றுவதற்காகவும், புதிய திட்டத்தின் கூடுதல் நன்மைகளை எடுத்துரைப்பதற்காகவும் அனைத்து ஊராட்சிகளிலும் தீவிர தகவல், கல்வி, தொடா்பு விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் குறித்து, ஒவ்வொரு குடும்பமும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகவே விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்படுகிறது. தகுதியுள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாள்கள் ஊதிய வேலைவாய்ப்பு சட்டப்பூா்வமாக உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நிலையான இயக்க நடைமுறை உருவாக்கப்படும். கிராம ஊராட்சிகளின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் நீா் பாதுகாப்புப் பணிகள், அடிப்படை ஊரக கட்டமைப்புப் பணிகள், ஊரக வாழ்வாதாரப் பணிகள், பேரிடா் மேலாண்மைப் பணிகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 318 வகையிலான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments