போக்சோ வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரை ஒட்டன்சத்திரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் பழனி (37). போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா். இவா், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜய் பழனியை திங்கள்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவா் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.