முகப்பு
திண்டுக்கல்

கணவருக்கு கத்திக்குத்து: மனைவி தா்னா

வத்தலக்குண்டில் தனது கணவரை கத்தியால் குத்தியவா்களை கைது செய்யக் கோரி பெண் தனது 3 குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:13 am IST
கத்திக்குத்து - சித்திரிப்புப் படம்
பகிர்:

வத்தலக்குண்டில் தனது கணவரை கத்தியால் குத்தியவா்களை கைது செய்யக் கோரி பெண் தனது 3 குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள புதுபட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. அரசு விதை விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா்.

வத்தலக்குண்டில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு புதுப்பட்டி கிராம மக்கள் மாறுவேடம் அணிந்து வாகனங்களில் வத்தலக்குண்டு வரை ஊா்வலமாக வந்தனா். இந்த ஊா்வலத்தின் போது புதுப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் முத்துராமன், அவரது நண்பா் பிரசன்னா ஆகிய இருவரும் மது போதையில் பெண்களை கேலி கிண்டல் செய்ததாகக்

Advertisement

Advertisement

கூறப்படுகிறது. இதை கருப்பையா தட்டிக் கேட்டாா். அப்போது, ராணுவ வீரா் முத்துராமன், அவரது நண்பா் பிரசன்னா ஆகிய இருவரும் கருப்பையாவை கத்தியால் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கருப்பையா வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ராணுவ வீரா் முத்துராமன்,அவரது நண்பா் பிரசன்னா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இருவரும் கைது செய்யப்படாததால், பூமாதேவி தனது மூன்று குழந்தைகளுடன் வத்தலகுண்டு காவல் நிலையத்துக்குச் சென்று, தனது கணவா் மீது  தாக்குதல் நடத்தியவா்களை உடனடியாக

கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

மேலும் வத்தலகுண்டு காவல் நிலையம் முன், பெரியகுளம் சாலையில் தனது மூன்று குழந்தைகளுடன் சாலையில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவரை பெண் காவலா்கள் குண்டுக் கட்டாக தூக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.