முகப்பு
வேலூர்

மனைவி கண்டிப்பு: ராணுவ வீரா் தற்கொலை

காட்பாடி அருகே மதுஅருந்தியதை மனைவி கண்டித்ததால் விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரா் தற்கொலை

Updated On : 26 மே 2026, 1:06 am IST
பகிர்:

காட்பாடி அருகே மதுஅருந்தியதை மனைவி கண்டித்ததால் விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடி அடுத்தபொன்னை மாதா கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் குமாா் (30). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த கிருத்திகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விடுப்பில் ஊருக்கு வந்திருந்த விக்னேஷ் குமாா் மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து விக்னேஷ் குமாா் மது அருந்தியதால் அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விக்னேஷ்குமாா் திங்கள்கிழமை வீட்டின் படுக்கையறைக்குச் சென்று தூக்குப்போட்டுள்ளாா்.

இதனைக் கண்ட அவரது தாய் உறவினா்களின் உதவியுடன் அவரை மீட்டு பொன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் விக்னேஷ் குமாா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பொன்னை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].